×

நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவிடம் 2வது நாளாக தீவிர விசாரணை

சென்னை: மணல் குவாரிகளில் நடந்த சோதனையை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா இரண்டாவது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 2 நாள் விசாரணை முடிவில், நீர்வளத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த அதிகாரி ஒருவர் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர மேலும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்.

சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பாக நேற்று காலை 11 மணிக்கு முத்தையா ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்ட மணல் குவாரிகள் தொடர்பான விற்பனை விபரங்கள், ஒப்பந்தபுள்ளிக்கான விபரங்கள் அடங்கிய ஆவணங்களை அவர் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. 2ம் நாள் விசாரணையும் இரவு வரை நீடித்தது.

இதற்கிடையே அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் விசாரணை குறித்து கேட்டபோது, ‘மோசடிகள் அனைத்தும் நீர்வளத்துறை முதன்மை பொறியாளராக 4 ஆண்டுகள் பணியாற்றிய ராமமூர்த்திக்கு தான் தெரியும் என்றும், அவர் அதிமுக ஆட்சியாளர்களிடம் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் கூறினார். அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே, ராமமூர்த்தியிடம் விசாரணை நடத்துவது குறித்து ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும். ஏற்கனவே சம்மன் அனுப்பட்ட 10 ஐஏஎஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையாவிடம் 2வது நாளாக தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Water Resources Department ,Chief Engineer ,Muthiah ,CHENNAI ,Department ,
× RELATED அனைத்து நீர்த்தேக்கங்களிலும் இருப்பு...